யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிசாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த பதினெட்டு வயதான காதலி இன்று (18) அதிகாலை வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் வரணி பகுதியை சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.