உலகவால் கிறிஸ்தவ பொதுமக்கள் தவக்காலத்தின் சிறப்பு நாளான பெரிய வெள்ளி முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை சிலுவைப் பாதை இடம்பெற்றது.
சிலுவைப் பாதை வழிபாடுகள் உணர்வு பூர்வமாக பலத்த பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை மட்டக்களப்பில் பழமை வாய்ந்த மரியாள் தேவாலயத்திலும் இன்று காலை ஆலய பங்குத்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் தலைமையில் பெரிய வெள்ளி சிலுவை பாதை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
ஆலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் ஆனது நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
இந்த சிறப்பு வழிபாடுகளில் அதிக அளவிலான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.