வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப் உத்தரவு – தனக்கு எதிரானது என தேசிய ஊடக கழகம்கருத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்பின் உத்தரவை தொடர்ந்து வொய்ஸ் ஒவ் அமெரிக்கா செயல்இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்கும் வொய்ஸ் அமெரிக்காதனக்கு எதிரானது தீவிரவாத போக்குகொண்டது என குற்றம்சாட்டியுள்ள  டிரம்ப் அதனை செயல் இழக்க செய்யும் உத்தரவில் கைச்சாத்திட்டுள்ளார்.

டிரம்பின் இந்த உத்தரவு வரிசெலுத்துவோர் இனி தீவிரபிரச்சாரங்களிற்கு அடிமையாகாமல் இருப்பதை உறுதி செய்யும் என தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை விமர்சித்து அரசியல்வாதிகள் வலதுசாரி ஊடகங்கள் தெரிவித்த கருத்துக்களை இணைத்துக்கொண்டுள்ளது:

“வொய்ஸ் ஒவ் அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிகளின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள வானொலி சேவையாக உருவாக்கப்பட்டது”

“ஒருவாரத்திற்கு சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான மக்களை சென்றடைகிறது” என தெரிவிக்கின்றது.

டிரம்பின் இந்த உத்தரவு சுதந்திரமான ஊடகங்கள் குறித்த அமெரிக்காவின் நீண்ட கால அர்ப்பணிப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என அமெரிக்காவின் தேசிய ஊடக கழகம் – நஷனல் பிரஸ் கிளப் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *