முழு முஸ்லிம் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவர் ஹிஸ்புல்லாஹ்

இலங்கையை அரசியலை பொறுத்தவரையில் முஸ்லிம் அரசியல் வித்தியாசமானது விசித்திரமானது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் வாழ்த்து மரணித்துவிட்டார்கள் இருந்தபோதிலும் ஒரு சிலரே மக்கள் மனதில் வாழ்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

தற்போது முஸ்லிம் அரசியலில் பல கட்சிகள் உருவாகி பல தலைமைகள் உருவாகி பெயரளவில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் முழு முஸ்லிம் சமூகத்தின் நன்மதிப்பை பெற்ற ஓர் அரசியல் தலைவராக கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் திகழ்கிறார்.

மறைந்த மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் மரணத்திற்கு பிற்பாடு முஸ்லிம் அரசியல் ஆளுமை ஒருவரை குறிப்பிடலாம் என்றால் அது ஹிஸ்புல்லாஹ் தான் என்பதற்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லை அவரது ஆளுமைக்கு முழு சமூகமும் சாட்சி.

கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களுடைய கம்பஹா, புத்தளம் மாவட்டத்திற்கான தேர்தல் பிரச்சார விஜயம் அதனை ஊர்ஜிதப்படுத்துகிறது.

மக்கள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் வரவேற்று தமது அன்பை பகிர்ந்திருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *