பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பில் பெண் சட்டத்தரணிகளில் ஒருவரான பாத்திமா சஸ்னா தனது கண்டனத்தினை இவ்வாறு தெரித்துள்ளார்:
ஒரு பெண்னை அவமதிக்கும் வகையில் “விபச்சாரி” (Prostitute) என்ற தரக்குறைவான வார்த்தை பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்டமை மிகவும் வேதனையளிக்கின்றது.
பொறுப்பு வாய்ந்த ஒரு பாரளுமன்ற உறுப்பினரிடம் இருந்து இவ்வாறான இழிவான வார்த்தைப்பிரயோகங்கள் வருவதானது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது இதற்காக நானும் ஒரு பெண் என்ற வகையில் எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனவே நாம் அரசாங்கத்தை வலியுறுத்துவது:
“வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் தவறான வார்த்தை பிரயோகங்கள் அடங்கிய உரை ஹன்சார்டிலிருந்து நீக்கப்பட வேண்டும்” மற்றும் “பெண்களை வார்த்தை ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் வகையில் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு எதிராக அநாகரீகமாக பேசியதற்காக தண்டிக்க வேண்டும்” என மேலும் தெரித்துள்ளார்.