அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவி வருகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலகே கலுவானயினை கல்வி அமைச்சில் இன்று (27.03.2025) சந்தித்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.S.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவு (பொது) -186
ஆரம்பப் பிரிவு ஆங்கிலம் – 260
கணிதம் – 310
வரலாறு – 148

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இவ்வாறான வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருப்பதனால் பாரிய பின்னடைவு காணப்படுவதாக கேட்டுக்கொண்டார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளிலே நியமனம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இவ்விடயங்களை கேட்டறிந்த செயலாளர் அதற்குறிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *