பொத்துவில் பிரதேச சபைக்கான தேர்தல் பிரசாரப் பணிகள் நேற்று (23) புதன்கிழமை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.
அந்த வகையில், பொத்துவில் பிரதேச சின்ன உல்லை வட்டார வீட்டுக்கு வீடு பிரசாரம் சின்ன உல்லை வட்டார வேட்பாளர் தோழர் சஹான் ஹனிபா தலைமையிலும் மற்றும் சர்வோதயபுர வட்டார வீட்டுக்கு வீடு பிரசாரம் சர்வோதயபுர வட்டார வேட்பாளர் தோழர் இமாம் தலைமையிலும் மற்றும் நகர வட்டார வீட்டுக்கு வீடு பிரசாரம் நகர வட்டார வேட்பாளர் இல்யாஸ் கபூர் தலைமையிலும் இடம்பெற்றன.
இந் நிகழ்வுகளில், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பிரசார நடவடிக்கைகளில் தீவிரமாக இணைந்து செயற்பட்டார்.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆதம் சலீம், தேசிய மக்கள் சக்தியின் பொத்துவில் பிரதேச செயற்பாட்டாளர்களான தானிஸ் மற்றும் பஹாத், பொத்துவில் பிரதேச சபை வேட்பாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



