சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்து நடாத்திய வருடாந்த இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா பிரதம அதிதியாகவும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம். சபீனா விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையமானது சுமார் 3 வருட காலமாக கலை இலக்கியத் துறை சார் மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும் இப்பிரதேசத்திற்கும் பாரிய சேவையாற்றி வருகின்ற ஒரு முன்மாதிரியான நிறுவனமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில், முக்கிய அம்சமாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா, அவர்களுக்கு மத்திய நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் உட்பட கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி குழுவினரால் அதிதிகள் புடை சூழ, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் மௌலவி ஏ.எம். தௌபீக் (நளீமி) இப்தார் பற்றிய விசேட சொற்பொழிவை நிகழ்த்தினார்.

