முக்கிய செய்திகள்
டிரெண்டிங்

6 நாட்களில் 10 மலைகளை கடந்த மட்டக்களப்பு 3 இளைஞர்களுடன் இணைந்த 8 பேர் கொண்ட அணி .

பிதுருதலாகலை, கிகிலியாமன, கிரிகல்பொத்த, மஹகுடுகல, சிவொனொலி பாத மலை, ஒற்றை மர மலை (Single tree hill), கொணிகள் மலை, தொடுபொலகந்த, உடரதல்ல, கார்ட்மோர் நீர்வீழ்ச்சி போன்ற மலைகளை 6 நாட்களில் Summit Equality அணியினர் அவர்களின் இலக்கை அடைந்துள்ளனர்.

தற்போதைய காலங்களில் இலங்கையில் காணப்படுகின்ற பெரும்பாலான பொது போக்குவரத்துக்களிலும், பொது இடங்களிலும் தொண்ணூறு சதவீதமான பெண்கள், சிறுவர்கள் பாலியல் துன்புருதல்களை அதிகம் சந்தித்து வருகின்றார்கள்.

இதனை கருதிட்கொண்ட வகையில் Summit Equality அணியினர் அனைத்து பாலினர்களுக்கும் மற்றும் சிறுவர்களுக்கும் பொது போக்குவாரத்தின் போது இடம்பெரும் துன்புருத்தல்களுக்கும், சவால்களுக்கும் விழிப்புணர்வூட்டும் வகையில் இலங்கையின் மிக உயரமான 10 மலைகளை கடந்துள்ளனர்.

இதில் மட்டக்களப்பை சேர்ந்த Shanjeevan Amalanathan, Aashiq Mohamed மற்றும் Sharontine இவர்களுடன் இணைந்து Induja Gunasekaran, Asmil Mohamed, Angel Queentus, Shekha Banu, Sayojitha Vijayakumar போன்றோர் கலந்து சிறப்பித்தார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: