இந்தியச்செய்திகள்
3 மாதத்தில் 1,000 கோடி வருமானம்

தமிழில் டாப் தொலைக்காட்சிகளில் ஒன்று சன் டிவி. டாப் சீரியல்களும் சன் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகி வருகிறது.
கயல், வானதைப்போல, எதிர்நீச்சல் போன்ற சீரியல்கள் தான் தற்போது டாப் 5 இடங்களில் உள்ளது.
அதே போல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படங்களுக்கு தான் அதிக TRP ரேட்டிங்கும் கிடைக்கிறது.
இந்நிலையில், சன் தொலைக்காட்சியின் வருவாய் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
2023ல் ஜூலை முதல் செப்டம்பர் வரை, அதாவது இந்த மூன்று மாதங்களில் மட்டுமே சன் டிவிக்கு ரூ. 1,048 கோடி வருவாய் கிடைத்து.
இதில் அவர்களுடைய முதலீடு போக, ரூ. 464 கோடி லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது வெறும் ஜூலை முதல் செப்டம்பர் வரை மூன்று மாதங்களில் ரூ. 464 சன் தொலைக்காட்சிக்கு லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
