
இஸ்ரேல் – பலஸ்தீனிடையேயான போர் குறித்து இலங்கையில் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கடிதம் ஒன்றை இன்று (14) கையளித்துள்ளனர்.
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவரிடம் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன் இன்னொரு பிரதியொன்று கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதுவரிடமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
