இலங்கைகிழக்கு மாகாணம்

வன வளத்திணைக்களத்தினால் எல்லைக்கல் இடப்பட்ட  காணிகளை விடுவிப்பு  செய்வது தொடர்பான கலந்துரையாடல்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வன வளத்திணைக்களத்தினால் எல்லைக்கல்  இடப்பட்ட  காணிகளை விடுவிப்பு செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி  கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட  செயலக மாநாட்டு மண்டபத்தில்இடம் பெற்றது.

மாவட்டத்தில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன வளபாதுகாப்பு   திணைக்களங்களினால் வர்த்தமானியிடப்பட்ட  நிலங்களை யுத்தத்திற்கு முற்பட்ட காலங்களில் மக்கள் பரம்பரை பரம்பரையாக குடியிருந்து மற்றும் பயிர்ச் செய்கைகள்  மேற்கொள்ளப்பட்ட காணிகளில் வனத்தினைக்களத்தினால் எல்லைக்கல் இடப்பட்டதால் தோன்றிய முரன்பாடுகளை தவிர்க்கும் முகமாக அக்காணிகளை விடுவிப்பு செய்வதற்கும் மற்றும் மாவட்டத்தில் வர்த்தமானி செய்யப்படாத அடர்ந்த காடுகளாக காணப்படும்  பிரதேசங்களை வர்த்தமானியில் உள்வாங்குவதற்குமான ஆரம்பக்கட்ட கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது.

இக் கலந்துரையாடலின் போது வன பாதுகாவலர்  நாயகம் கே. எம். ஏ.பண்டார, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன், வன பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள், மகாவலி அதிகார சபையின் உயரதிகாரிகள்,
பிரதேச செயலாளர்கள், நில அளவை திணைக்கள உயர் அதிகாரிகள், வன வளத்திணைக்கள, வனஜீவராசிகள் திணைக்கள, காணிப்பயன்பாட்டு, காணி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: