இலங்கைகிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்

மட்டக்களப்பு தலைமைய பொலிஸார் பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல் எனும் தலைப்பில் நாட்டில் அண்மை காலமாக சிறுவர் கடத்தல் அதிகரித்துள்ளது எனவே பாடசாலை மாணவர்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் கொண்ட துண்டுபிரசுரம் ஒன்றை நேற்று (22) விநியோகித்துள்ளனர்.

இதில் பாடசாலை முடிந்தவுடன் மாணவர்கள் அநாவசியமாக வெளியில் நிற்காமல் வீட்டுக்கு உடன் செல்ல பணிப்புரை வழங்கல், இனம் தெரியாதோர் உண்பதற்கு ஏதாவது கொடுத்தால் வாங்க வேண்டாம் எனவும், இனம் தெரியாதேர் வாகனங்களில் ஏற்றிச் சென்று வீடுகளுக்கு விடுகின்றோம் என்றால் வாகனங்களில் ஏற வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் இது தொடர்பாக பெற்றோருக்கு தெரியப்படுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்குமாறும் சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால் பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்பிற்கு அல்லது 065 2224356, 065 2224422 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு துண்டுபிரசுரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் துண்டுபிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: