கிரிக்கெட்விளையாட்டுச்செய்திகள்

தாய்லாந்து தேர்தலில் ஜனநாயக ஆதரவு கட்சிகள் வெற்றி

தாய்லாந்து பொதுத் தேர்தலில் இராணுவ ஆட்சியை நிராகரிக்கும் வகையில் மக்கள் வாக்ளித்துள்ளனர். இன்று வெளியான தேர்தல் பெறுபேறுகளில் ஜனநாயக ஆதரவான கட்சிகளுக்கு ஆதரவான இரு எதிர்க்கட்சிகள்;  முன்னிலையில் உள்ளன.

500 ஆசனங்கள் கொண்ட தாய்லாந்து பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நேற்று நடைபெற்றது. 

ஆட்சியமைப்பதற்கு குறைந்தபட்சம் 251 ஆசனங்கள் தேவை.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை வெளியான பெறுபேறுகளின்படி, 42 வயதான பீதா லிம்ஜரோன்ராத் தலைமையிலான எம்.ஈ.பி. கட்சி 151 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவாத்ராவின் மகளான பேதோங்தான் ஷினவாத்ரா தலைமையிலான ப்வே தாய் கட்சி 141 ஆனங்களைப் பெற்றுள்ளது.

பூமி தாய் கட்சி 70 ஆசனங்களையும், பிரதமர் பிரதமர் பிரயுத் சான் ஓ-சா தலைமையிலான யூடிஎன் கட்சி 36 ஆசனங்களையும் வெல்ல வாய்ப்புள்ளதை பெறுபேறுகள் வெளிப்படுத்துகின்றன.

பேதோங்தான் ஷினவாத்ரா, பீதா லிம்ஜரோன்ரா

தாய்லாந்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவப் புரட்சியைடுத்து, அப்போதைய இராணுவத் தளபதி பிரயுத் சான் ஓ-சா பிரதமராக பதவியேற்றார். அவர் தொடர்ந்தும் அப்பதவியை வகித்து வருகிறார்.

இரு பிரதான எதிர்க்கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

தாய்லாந்தின் பிரதமரை பாராளுமன்றத்தின் 500 ஆசனங்கள் கொண்ட கீழ் சபையும், 250 ஆசனங்களைக் கொண்ட செனட் சபையும் இணைந்து தெரிவு செய்கின்றன.

ஆனால், தாய்லாந்து இராணுவ ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய சட்டத்தின்படி, செனட் சபைக்கான 250 உறுப்பினர்களும் இராணுவத்தினால் தெரிவு செய்யப்படுவர். 

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: