இலங்கைகிழக்கு மாகாணம்

ஒற்றையாட்சி முறையில் 75 வருடமாக சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் மீது அடக்குமுறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்!!

ஆங்கிலேயர் இந்த நாட்டை சிங்கள தேசத்திடம் கையளித்து 75 வருடங்களாக ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் கீழே தமிழர்களை அடக்கும் முகமாக சிங்கள பேரினவாத அரசு செயற்பட்டு வருகின்றது. எனவே சமஷ;டி அடிப்படையிலான அரசியல் யாப்பை கொண்டுவரும் பட்சத்தில் தான் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தமிழ் தேசிய முக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் வாகரை மாணிக்ககரை கடற்கரையில் இன்று மே 18 இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் 14 வது ஆண்டு நினைவேந்தலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.  

தமிழர்களை பொறுத்த மட்டிலே 75 வருடங்களாக தமிழர்களுக்கு எதிராக இருக்கம் அரசியல் அமைப்பு மாற்றப்படவேண்டும் எங்கள் மீது இதுவரை நடாத்தப்பட்ட இனழிப்புக்காக சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டும் அத்துடன் தமிழ்கள் மீது நடாத்தப்பட் யுத்த குற்ற உள்ளகபொறி முறை ஊடாக நடாத்தும்  விசாரணை நிறுத்தப்படவேண்டும்.

அதேபோன்று 1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் கொண்டுவரப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான 13 வது திருத்தசட்டம் திருத்தப்படவேண்டும் அத்துடன் இங்கு திழர்கள் வாழக்கூடிய சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு தமிழ் தேசம் சுயநிர்ணய உரிமை இறழை அங்கீகரிக்கப்படவேண்டும் பயங்கரவாத சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத சட்டம் நீக்கப்படவேண்டும் காணாமல் போனோருக்கான நீதி கிடைக்க சர்வதேச நீதி விசாரணை மேற் கொள்ளப்பட்டு அதற்கான பரிகாரம் கிடைக்க வேண்டும்

எனவே இந்த தமிழ் மக்களை இந்த தீவிலே நிம்மதியாக வாழவைக்க கூடிய ஒரு சூழ்நிலை இந்தியாவுக்கு இருக்கின்றது. இருந்தபோதும் இந்தியாவை பொறுத்தமட்டில் தங்களது நலநனை கருத்தில் கொள்ளாது எங்கள் மக்கள் நிம்மதியாக வாழக்சூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் விதமாக இந்த நாடு அரசியல் அமைப்பை மாற்றி அமைக்க சிங்கள பேரினவாத அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு இந்த நாட்டுக்கு பெருத்தமான சமஷ;டி அடிப்படையிலான அரசியல் யாப்பை கொண்டுவரும் பட்சத்தில் மட்டும் தான் இந்த மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்றார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: