கிரிக்கெட்விளையாட்டுச்செய்திகள்

ஐபிஎல் டி20 போட்டி ராஜஸ்தான்- லக்னோ அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை!!

நடப்பு தொடரில் முதல் முறையாக சொந்த ஊரான ஜெய்ப்பூரில் கால்பதிப்பதால் கூடுதல் உற்சாகத்துடன் விளையாடுவார்கள்.

கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் தோற்ற லக்னோ அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் வியூகங்களை தீட்டி வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்த கிரிக்கெட் திருவிழாவில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது. நடப்பு தொடரில் முதல் முறையாக சொந்த ஊரான ஜெய்ப்பூரில் கால்பதிப்பதால் கூடுதல் உற்சாகத்துடன் விளையாடுவார்கள்.

லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 3 வெற்றி (டெல்லி, ஐதராபாத், பெங்களூருவுக்கு எதிராக), 2 தோல்விகளுடன் (சென்னை, பஞ்சாப்புக்கு எதிராக) 6 புள்ளிகள் எடுத்து 2-வது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் தோற்ற லக்னோ அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் வியூகங்களை தீட்டி வருகிறது.

சவால்மிக்க ராஜஸ்தான் அணியின் வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்றால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் லக்னோ ஒருங்கிணைந்து மிரட்ட வேண்டியது அவசியமாகும்.

லக்னோ அணியில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் இன்னும் களம் இறக்கப்படவில்லை. இன்றைய ஆட்டத்தில் கைல் மேயர்சை நீக்கிவிட்டு டி காக்கை சேர்ப்பது குறித்து அந்த அணி நிர்வாகம் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: