இந்தியச்செய்திகள்இலங்கைபிரபலமானவைமுக்கிய செய்திகள்

உலக சனத்தொகையில் முதலிலிடத்தில் இந்தியா – சீனா கூறுவது என்ன தெரியுமா..!!

உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது என ஐ.நா. மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி, சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய சீன வெளியறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்து அவர் தெரிவித்ததாவது, மக்கள் தொகை பங்களிப்பு அளவைச் சார்ந்தது அல்ல அது தரத்தைச் சார்ந்தது.

மக்கள் தொகை முக்கியம், அதே போன்றுதான் திறமையும் முக்கியம்.

அந்த வகையில் சீனாவில் 140 கோடியைத் தாண்டிய மக்கள் தொகையுள்ளது.அதேவேளை, தரமான பணியாளர் வர்க்கத்தினரும் 90 கோடி பேர் இருக்கிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: