இலங்கைகிழக்கு மாகாணம்

ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் அம்பாள் ஆலய வருடாந்த திருச் சடங்கு உற்சவப் பெருவிழா

மட்டக்களப்பில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளத்துவெட்டை திகிலிவெட்டை சந்திவெளி திருவருள்மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் அம்பாள் ஆலய வருடாந்த திருச் சடங்கு உற்சவப் பெருவிழா இன்று புதன் கிழமை (24) அதிகாலை வேளை அம்மன் திருக்குளிர்த்தி பாடலுடன் உடுக்கைச் சத்தம் முழங்க சிலம்பொழியுடன் இனிது நிறைவு பெற்றது.தூர இடங்களிலும் இருந்து வந்து மக்கள் அம்மனை வணங்கி அருளாசியினை பெற்றுச் சென்றனர்.
கடந்த 20.05.2023 அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 5 நாட்கள் திருச்சடங்குகள் நடைபெற்றன.

இறுதி நாளாகிய இன்று விநாயகர் பானை எடுக்கப்பட்டு அம்மனுக்கு பாலாமர்தம் ஒப்புக் கொடுக்கப்பட்டது.கன்னிமார் பூசை, தேவாதிகளுக்கு சாட்டை பலி கொடுக்கப்பட்டது. பள்ளைய பூசைகள்,தீ மிதித்தல் மற்றும் அம்பாளின் திருக்குளித்தியுடன் பூசைகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது.


உற்சவ நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம குருவும் ஆதின தர்மகர்த்தாவும் கிரியா வித்தகர் சிவாச்சாரியார திலகம் சிவஸ்ரீ செ.மகேந்திரக் குருக்களுடன் கிரியா அலங்கார திலகம் சிவஸ்ரீ வெ.கமலநாத சர்மா மற்றும்  உற்சவ கால பிரதம குரு மாந்திரிக பூசகர் சிவதிரு செ.கி.கிருபைரெத்தினம் ஆகியோர்கள்  கலந்து கொண்டு உற்சவ கால  திருச்சடங்குகளை நடாத்தினார்கள்.

கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை காரணமாக குறித்த பிரதேச ஆலயத்தில் உற்சவ திருவிழா நிகழ்வுகள் இடம்பெறாமல் இருந்தன. இதனால் அடியார்கள் சுவாமியை தரிசித்து வணங்குவதில் பல சிரமங்களை எதிர்நோக்கி இருந்தனர். ஆனால் இம்முறை  அவ்வாறான நிலமை காணப்படாததால் ஆலய உற்சவங்களில் கலந்து கொண்டு இறைவனின் அருளாசி பெறக்கூடிய வாய்ப்பு இருந்ததை எண்ணி மகிழ்சி தெரிவித்தனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: