இலங்கைகிழக்கு மாகாணம்கிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் மறைந்த தலைவர் அஷ்ரபின் 23 வது நினைவேந்தல் நிகழ்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 23 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று சாய்ந்தமருது பெளஸி மைதானத்தில் நடைபெற்றது.

கட்சியின் தவிசாளர் ஏ.எல்.எம்.மஜிட்  தலைமையில் இடம்பெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக இந்தியா வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் கவிமாமணி பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம் ஹரீஸ்,எம்.எஸ் தெளபீக்,முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம் மன்சூர்,அலி சாஹீர் மெளலானா,ஹுனைஸ் பாருக்,முன்னாள் மாகாண அமைச்சர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள்,என பல்லாயிரக்கணக்கான போராளிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: