வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை மேற்கு வவுனதீவு பிரதேச செயலகத்தில் கிராம வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல் பிரதேச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் வேண்டுகோளின் பேரில், இணைப்புச் செயலாளர் பிரசாந்தனின் பங்குபற்றுதலுடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது வவுனதீவுப் பிரதேசத்தில் முற்றாக சேதமடைந்த வீதிகளை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்வதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. அத்துடன் பிரதேசத்தின் சகல பிரிவுகளிலும் காணப்படும் சேதமடைந்த வீதிகள், பாலங்கள் தொடர்பான தரவுகள் பெறப்பட்டது.
பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இநிகழ்வில் பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சபேசன் உட்பட கிராம வீதி அபிவிருத்தி அதிகாரி, பொருளாதார அபிவிருத்தி, கிராம சேவை உத்தியோகத்தர்கள் , கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

