வீடு உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜீவன் தொண்டமான் எதிர்ப்பு.

இரத்தினபுரி கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட வெள்ளாந்துரை தோட்ட பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்று தோட்ட நிர்வாகத்தினரால் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தோட்ட உட் கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்திற்கு நேற்று சென்றுள்ளார்.
இந்த நிலையில் தோட்ட நிர்வாகத்துடன் இடம் பெற்ற கலந்துரையாடலை அடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை வழங்குவதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் கொண்ட மான் தெரிவித்தார்
அதோடு தொடர்ச்சியாக பெருந்தோட்டங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனை தீர்த்துக் கொள்வதற்காக பெருந்தொட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன பங்களிப்புடன் வேலை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் சிவில் சமூகங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களை ஒன்றிணைத்து கலந்துரையாடல் ஒன்று அடுத்த இரண்டு வாரங்களில் இடம்பெற உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சம்பவங்களில் மக்களின் நலனை மாத்திரமே கருத்தில் கொண்டு அவர் செயல்பட்டதாகவும் இவ்வாறான சம்பவங்களில் அரசியல் லாபம் தேட நினைக்கவில்லை என்றும் மேலும் தெரிவித்தார்.
