இலங்கைகொழும்புமுக்கிய செய்திகள்
வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்க இடம் வழங்கப்படவுள்ளது – ஜனாதிபதி

கொழும்பின் சேரி குடியிருப்பு பகுதிகளில் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்க இலவசமாக இடம் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதனை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்.
இதன்போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 2024ஆம் ஆண்டில் கொழும்பில் சுமார் 50,000 குடும்பங்களுக்கு வீட்டு உரிமைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு தோட்ட மக்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
