இலங்கைகிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

வாகரை தேசிய தொழிற் பயிற்சி நிலையத்தினால் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு – 2023

.

வாகரையில் தேசிய தொழிற் பயிற்சி நிலையத்தினால் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (13) காலை 10 மணிக்கு வாகரை தேசிய தொழிற் பயிற்சி நிலையத்தில் (VTC) இல் Information and communication technology technician மற்றும் Auto mechanic போன்ற கற்கை நெறிகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

2020 மற்றும் 2021 ல் பரீட்சைக்கு தோற்றி சித்திபெற்ற மாணவர்களுக்கு இன்று NVQ Level 3 மற்றும் NVQ Level 4 ஆகிய டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் ,
பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியும் போதனாசிரியருமான N.P.M. நிபாஸ் அவர்கள்
வாகரைப்பிரதேச மாணவர்கள் தேசிய தொழில் பயிற்சி கற்கைநெறியினை அதிகளவாக கற்கவில்லை எனவும் மாணவர்கள் குறைவாக உள்ளதனால் சில கற்கை நெறிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்கால இளைஞர்கள் இவ்வாறான கற்கை நெறியினைக் கற்க வேண்டும் எனவும், அவர்கள் தங்களுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச மாணவர்கள் அவர்களுக்கான இலவச தொழில் கற்கை நெறியினைக் கற்க அவர்களின் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அதிதிகளாக இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் S. ரொபின்சன், நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் A. உதயதாசன்,
வாகரை பிரதேச செயலக மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர் A.B.M. பைசால்,பிரதி பணிப்பாளர் MB நளீம் மற்றும் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியும், போதனாசிரியருமான N.P.M. நிபாஸ்
ஆகியோரும் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.

அத்துடன் மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: