இந்தியச்செய்திகள்முக்கிய செய்திகள்

வளர்ந்துவரும் நாடுகளுக்கு இந்தியா நம்பிக்கை அளித்துள்ளது: பிரதமர் மோடி

எந்தவித விடுபடல்களும் இல்லாமல், தொழில்நுட்ப உதவியால் ஏழைகளிடம் சீக்கிரம் அதிகாரத்தை கொண்டு சேர்த்து வரும்  இந்தியாவைப்  பார்த்து, வளர்ந்துவரும் நாடுகள் (Global South) உற்சாகம் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நெட்வொர்க் 18 குழுமத்தின் Moneycontrol.com -க்கு பிரதமர் மோடி பேட்டியளித்தார். பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பை வடிவமைப்பதைலும், செயல்படுத்துவதிலும் இந்தியா முன்னேபோதும் இல்லாத வகையில் முன்னிலை வகிக்கிறது. உலகளாவிய அளவில், இந்தியாவின் பங்களிப்பு ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.

பிரதமர் மோடி தனது பதிலில், ” உலகிலேயே தொழில்நுட்பத்தில்  திறன் வாய்ந்த மனித வளங்கள் கொண்ட நாடாக  இந்தியா பார்க்கப்படுகிறது. தற்போது, டிஜிட்டல் உள்கட்டமைப்பு தொழில்நுட்பத்திலும், மனித வள ஆற்றலிலும் இந்தியா முக்கிய பங்கு ஆற்றிவருகிறது. கடந்த 9  ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற திட்டங்கள் மற்றும் தளங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் பல மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இருந்தாலும், நாட்டின் தொழில்நுட்ப புரட்சி, பொருளாதாரத்தை மட்டுமல்லாமல், சமூக மட்டத்திலும் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

மக்களை மையமாகக் கொண்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நம்மைப் பொறுத்தவரையில், தொழில்நுட்பம் என்பது மக்களை அதிகாரப்படுத்துவதற்கும், விடுபட்ட மக்களை சென்றடைவதற்கு, வளர்ச்சியையும், நலத்திடங்களையும் கடைக்கோடி வரை கொண்டு செல்வதற்குமான கருவியாக பார்க்கப்படுகிறது.

ஜன் தன் வங்கிக் கணக்குகள் – ஆதார்- மொபைல் என்ற JAM திட்டத்தின் மூலம், ஏழ்மை நில மக்களும், அடித்தட்டு மக்களும் அதிகாரம் பெற்று வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில், கோடிக்கணக்கான மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைய காரணமாக இருந்த  தொழில்நுட்பத்தின்  பங்கை மறக்கமுடியாது.

சாலையோர வியாபாரிகள் QR கோட் மூலம் பண பரிமாற்றம் செய்ய சொல்வதை கேட்கும் அயல்நாட்டு பிரதிநிதிகள் வியப்படைந்து நிற்கின்றனர். உலகின் ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்தனையில், பாதிக்கும் மேல் இந்தியாவில் நடைபெறுவதில் ஆச்சரியமில்லை.

அரசு இணைய சந்தை திட்டம்,  சிறு வணிகர்களுக்கும்  ஆரோக்கியமான,  சமமான போட்டி சூழலை உருவாக்கி கொடுத்துள்ளது. இதன்காரணமாக, அவர்கள் தற்போது அரசு கொள்முதலில் தவிர்க்கமுடியாக அங்கமாகியுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், 200 கோடிக்கும் அதிகமான இலவச தடுப்பூசிகளை மக்களுக்கு கொண்டு செல்ல CoWin என்ற தொழில்நுட்ட தளமே நமக்கு உதவியது. கோவின் தளம் பிறநாடுகளும் பயன்படுத்தும் வகையில் தயார்படுத்தப்பட்டது.

நாட்டின் தற்போது உள்ள மின்னணு வர்த்தக சூழலை  ஜனநாயகபடுத்தும் விதமாக  மின்னணு வர்த்தகத்திற்கான திறந்தவெளி கட்டமைப்பு (Open Network for Digital Commerce) உருவாக்கப்பட்டது .

ட்ரோன்கள் மூலம் கிராமங்களின் நிலம் மற்றும் வீடுகளின் வரைபடம் தயாரிக்கப்படும் விதமாக ஸ்வமிதா திட்டம் கொண்டுவரப்பட்டது. இன்னும், எண்ணற்ற திட்டங்களை நாம் பேசிக் கொண்டே போகலாம். ஆனால், இந்த மாற்றங்கள் உலகளவில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி  குறிப்பிடுவது மிக முக்கியமானது. 

எந்தவித விடுபடல்களும் இல்லாமல், தொழில்நுட்ப உதவியால் ஏழைகளிடம் சீக்கிரம் அதிகாரத்தை கொண்டு சேர்த்து வரும்  இந்தியாவைப்  பார்த்து, வளர்ந்துவரும் நாடுகள் (Global South) உற்சாகமும், நம்பிக்கையும் கொண்டுள்ளனர் என்று மோடி தெரிவித்தனர்.

ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள வளரும் நாடுகளை Global South எனவும், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடுகள் Global North எனவும் குறிப்பிடப்படுகின்றன.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: