சினிமா

ரசிகர்களை கவரும் என்ன பெத்த அம்மாவே பாடல்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ருத்ரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள என்ன பெத்த அம்மாவே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

என்ன பெத்த அம்மாவே பாடல் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் ரூ.3.5 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், ருத்ரன் படத்தில் இடம்பெற்றுள்ள என்ன பெத்த அம்மாவே என்ற பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான இப்படத்தின் பாடலம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: