இலங்கைமுக்கிய செய்திகள்வட மாகாணம்

யாழில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இளைஞன் பலி!

இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் , போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர். 

இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். 

அதேவேளை இன்னுமொரு இளைஞனும் போதைக்கு அடிமையான நிலையில் , உடலில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இதைப் படித்தீர்களா?
Close
Back to top button
error: