மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் 1,037 ஆக அதிகரிப்பு
மொராக்கோவில் ஏற்பட்ட 6.8 ரீக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் 1037 க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 1200க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 721 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்த நாட்டு மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தினால் பாரிய கட்டிடங்கள் இடிந்து வீழந்துள்ளதாகவும் நள்ளிரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டும் 19 நிமிடங்களுக்கு பின்னர் நான்கு மெக்னிட்யூட் அளவிலான மற்றும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அந்த நாட்டின் தலைநகர் Rabat முதல் Marrakech வரை நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், நாட்டில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பகுதிகளிலும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதுடன் 2004 இல் மொராக்கோவின் வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 628 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


