இலங்கைகிழக்கு மாகாணம்

முதியோர் பராமரிப்பு நிலையத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்தின் சித்தாண்டி-1 கிராம சேவை உத்தியோகத்தர்  பிரிவில் உள்ள முதியோர் பகல் நேர பராமரிப்பு நிலையத்திற்கு முதியோர் தேசிய செயலகத்தினால் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் முதியோர் பராமரிப்பு  நிலையத்திற்கான அத்திவாசியமான  உபகரணங்களை வழங்கிவைத்த இந்நிகழ்வு, பிரதேச சமூக சேவை பிரிவின்  முதியோர் நலன் உத்தியோகத்தர் எல். டபிள்யு. ரி. திலினி சுபாஷினி திட்டமிடலில் இடம்பெற்றது.

2022ஆம் ஆண்டில்  முதியோர் தேசிய செயலகத்தினால் 35இலட்சம் ரூபாய் பெறுமதியில் இம்முதியோர் பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இதன்போது முதியோர் தேசிய செயலகம்   500 000/- ரூபா பெறுமதியான தளபாடங்கள், சமையல் மற்றும் பொழுது போக்கு உபகரணங்கள் என்பவற்றை இந்நிலையத்திற்கு  அன்பளிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதேச கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர், நிலைய முதியோர்கள் என பலர் பங்கேற்றனர்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: