முக்கிய செய்திகள்

முட்டை மற்றும் கோழி இறைச்சி தொடர்பில் புதிய அறிவிப்பு.

அடுத்த வருடம் முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலை வீழ்ச்சி அடையும் என்பதுடன் மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதனால், அடுத்த வருடம் முதல் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.


‘கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு பெற்றிருந்தாலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட கொவிட் நோய்த் தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தி குறைந்ததன் விளைவாக கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.
சுமார் 34 இலட்சத்து 20 ஆயிரம் புதிய கோழிக் குஞ்சுகள் தற்போது கோழிப் பண்ணைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பெரும்பாலும், அந்தக் கோழிகள் டிசம்பர் மாதத்திற்குள் முட்டையிடும் பருவத்திற்கு வளர்ந்துவிடும்.


எனவே எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர், இந்த நாட்டில் முட்டை உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என குறித்த தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான தீவன உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை இந்தத் தொழில்துறையினருக்கு வழங்கியுள்ளோம்.
எதிர்காலத்தில் எமது மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: