முக்கிய செய்திகள்
மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

இலத்திரனியல் மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கோரிக்கையானது இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிவிப்பில் ebil.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு இலத்திரனியல் மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்ய முடியும் கூறப்படுகிறது.
அதேவேளை, 1987 என்ற எண்ணுக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் EBILL மின்சாரக் கணக்கு எண் மின்னஞ்சல் முகவரி என குறுந்தகவலை (SMS) அனுப்புவதன் மூலமாகவும் இந்த சேவையில் இணைந்துக் கொள்ள முடியும்.
சில மாதங்களுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு இச்சேவையை வழங்குவதே இலக்கு என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
