சிறப்புக் கட்டுரை

மருத்துவம் அறிவோம்- வாய், வயிறு சுத்தம் அவசியம்!

பல் நன்கு இருந்தாலும் பல் மருத்துவரிடம் வருடம் ஒரு முறை ஆலோசனை பெற வேண்டும். உடற்பயிற்சியால் பல நன்மைகள் உண்டு. அதில் ஒன்று உடலின் கழிவுப் பொருட்கள் வெளியேற உதவுவது. வாயும் சுத்தமாக இருக்கணும், வயிறும் சுத்தமாக இருக்கணும் வாய் சுத்தம் என்பது தினமும் இரு வேளை பல் தேய்ப்பது பிலாஸ் செய்யும் முறை.

இது பல் இடுக்குகளில் உணவு தேங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க உதவும். இதன் முறையினை பல் மருத்துவர் மூலம் அறிந்து கடைபிடிக்கவும்.

நாக்கினை சுத்தம் செய்ய வேண்டும். அளவான சர்க்கரையே உணவில் சேர வேண்டும். தூசு மிகுந்த, கும்பல் மிகுந்த பகுதியில் எப்போதுமே மாஸ்க் அணிய வேண்டும். உப்பு கலந்த வெது வெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்கலாம்.

தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும். பிலாஸ் செய்வதன் மூலம் வாய் ஆரோக்கியம் காக்கப்படுவதுடன் இருதய நலனும் காக்கப்படுகின்றது. இதையும் படியுங்கள்: மக்கள் இதயத்தில் வீற்றிருக்கும் தென்னாட்டு இமயம் பா.சிவந்தி ஆதித்தனார் பல் நன்கு இருந்தாலும் பல் மருத்துவரிடம் வருடம் ஒரு முறை ஆலோசனை பெற வேண்டும்.

இது மட்டுமா? வாய் எப்போதும் ரைஸ்மில் போல் எதனையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. வாய் நன்கு கொப்பளிப்பது அவசியம். விரல் கொண்டு ஈறுகளை தேய்த்து விட வேண்டும். மேலும் பேசும் வார்த்தைகளும் கருத்துள்ளதாக இருக்க வேண்டும். அளவாக பேச வேண்டும். கடினமான வார்த்தைகள் அதிக சத்தம் இவை உங்களுக்கும் கேட்போருக்கும் தீங்கு விளை விக்கும். வயிறு சுத்தம் அன்றாடம் 8 முதல் 10 கிளாஸ் தினமும் நீர் உட் கொண்டாலே உடலில் உள்ள நச்சுகள் நீங்கும். இது சீரான செரிமானத்திற்கு நன்கு உதவும்.

கோடை காலத்தில் நீரின் அளவை கூட்டிக் கொள்ளலாம். இதையும் படியுங்கள்: பயந்து அழுத திரிஷா: கலக்கிய பானுப்பிரியா நார்சத்து உணவு அவசியம். காய்கறி சாலட், பழ வகைகள், பருப்பு வகைகள், முழு தானியம் உணவு இவை அன்றாடம் உணவில் இருந்தாலே வயிறு எளிதில் சுத்தமாகி விடும்.

சிப்ஸ், வறுத்த, பொரித்த, நொறுக்கு தீணி வகைகளை வீட்டிலேயே வைக்காதீர்கள். பின் வயிறு சுத்தமோ சுத்தம்தான். (அதாவது மோசமாகும்) உடற்பயிற்சியால் பல நன்மைகள் உண்டு. அதில் ஒன்று உடலின் கழிவுப் பொருட்கள் வெளியேற உதவுவது. ஆழ்ந்த மூச்சு பயிற்சியும் செய்யுங்கள். * ஒரு கவளம் உணவை 32 முறை நன்கு மென்று உண்ண வேண்டும் என்று குறிப்புகள் கூறுகின்றன. 5 நிமிடத்தில் 5 இட்லி, ஒரு காபி குடித்து வாழும் நபர்கள் இதனை கவனிக்கவும். 3 முறை எண்ணி எண்ணி ஒரு கவள உணவினை உண்பது முடியுமா? என்று பேசலாம். இதனை குறிப்பிடுவதன் பொருள் உணவினை கூழ் போல் நன்கு மென்று விழுங்குங்கள் என்பதுான்.

இதையும் படியுங்கள்: ஜீவன்களுக்காக பல நிலைகளில் அருள் புரியும் ஜகன்மாதா மது, புகை வேண்டவே வேண்டாம். காபி, டீ அளவினை 1 அல்லது 2 ஆக அளவு படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் மதியத்திற்குப் பிறகு வேண்டவே வேண்டாம். பிர்பயோடிக்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் (உம்) தயிர். இதனை மேலும் உங்கள் மருத்துவர் மூலம் கேட்டு அறிந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதிக கவலை, மன உளைச்சல் இவை வயிறு, குடல் நலனை வெகுவாய் பாதிக்கும்.

அதிக உணவு கூடாது என்பது அவசியம். ஆனால் முறையான நேரத்தில் சத்தான உணவு என்பதும் அவசியம். மதிய உணவினை 4 மணிக்கும் இரவு உணவினை 11 மணிக்கும் உண்பவர்கள் இதனை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதையும் படியுங்கள்: இதயம் ஒரு கோவில்- மாரடைப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோயை தடுப்பது எப்படி? புகை, மது- இரண்டும் வேண்டவே வேண்டாம்.

அதிக எடை இருந்தால் உடனடியாக குறைக்க வேண்டும். (வயிறு, குடல் என மொத்தத்தில் ஜீரண மண்டலம் சரியாக இருந்தால் உடலில் அநேக பிரச்சினைகள் இருக்காது. நமது குடலில் 200-க்கும் மேற்பட்ட பிரிவில் நுண்ணுயிர்கள் உள்ளன. இவற்றில் அநேக பிரிவுகள் நன்மை பயக்கின்றன. சில பிரிவுகள் தீங்கு விளைவிக்கின்றன. நன்மை பயப்பவை நன்கு இருக்கும் போது நீரிழிவு, குடல் வீக்கம், மூட்டு வலி போன்ற பாதிப்புகளின் அபாயம் குறைகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன) பொதுவில் குடல் நன்கு இருந்தால் * நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி.

மனநிலை ஹார்மோன் சீராய் இருத்தல் குடல் நலம் இருதய நலம் புற்று நோய் அபாயம் குறைதல் போன்றவை நன்றாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆரோக்கியமற்ற குடலின் அறிகுறிகள் அதிக ஸ்ட்ரெஸ், குறைவான தூக்கம், அதிக சர்க்கரை உணவு, அதிக ஆன்ட்டிபயாடிக், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ஹார்மோன் சரியின்மை, பல நோய் தாக்குதல்கள்.

வயிற்றில் வாயு, உப்பிசம், மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு நெஞ்செரிச்சல். அதிக சர்க்கரை உணவினை எடுத்துக் கொள்பவர்கள் (இது உடலில் அதிக வீக்கத் தினை ஏற்படுத்தும். இதுவே பல நோய்களுக்கு புற்று நோய் உட்பட காரணம் ஆகின்றது) திடீரென காரணமின்றி, எடை கூடுதல் அல்லது குறைதல்.

எப்போதும் சோர்வாய் இருத்தல். சரும பாதிப்பு. இவைகளும் உங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் குறைந்து தீய பாக்டீரியாக்கள் அதிகரித்து இருப்பதனைக் காட்டுகின்றது. ஆக மேற்கூறப்பட்ட கருத்துக்களை அறிந்து கையாண்டால் ஆேரோக்கியமான உடல் நலமும், மன நலமும் பெறலாமே. எனக்கு நேரமே இல்லை- எனறால் எதனையும் முழுமையாய் சரியாய் செய்து முடிக்க முடியவில்லை என்று வருத்தப்படுகின்றீர்களா? வாழ்க்கை ஏனோ சுரத்து இல்லாமல் இருக்கின்றதா? சில ஆய்வாளர்கள் கூறும் சில விதிமுறைகளை நீங்கள் கடை பிடித்து பார்க்கலாமே.

ஒருவர் தான் செய்யும் எந்த வேலையிலும், எந்த பிரிவிலும் 10 சதவீதம் முன்னேற வேண்டும் என்றால் அவர்கள் 100 சதவீத முயற்சியினை உழைப்பினை கொடுக்க வேண்டும்.

உங்கள் கனவுகளை நனவாக்கித் தரும் ஒரு உண்மையான வழிகாட்டி கிடைத்தால் விட்டு விடாதீர்கள். பொறுமையாக மட்டுமே எதனையும் கையாள வேண்டும். எந்த ஒரு நல்ல பழக்கத்தினையும் முறைபடுத்திக் கொள்ள குறைந்தது 21 நாட்களாவது விடாமல் கவனத்துடன் செய்ய வேண்டும்.

நீங்கள் செய்யும் முயற்சி, வேலையினை பற்றிய கருத்தினை நம்பகமான சிலரிடம் கேளுங்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் அந்த வார செயல்களை எடை போட்டு பாருங்கள். கொஞ்சம் கூடுதல் உழைப்பு தேவைதான். முக்கியமல்லாதவற்றினை ஒதுக்க, நீக்க கற்றுக் கொள்ளுங்கள். நிறைய நேரம் கிடைக்கும்.

சாப்பிடும் நேரத்தில் டென்ஷன், யோசனை இன்றி இருப்பதும், சிறிது ஓய்வு நேரமும்- சற்று அமைதியாய் இருப்பதும் தேவை. எதனையும் முழு கவனத்தோடு செய்யும் ஆற்றல் இருந்தால் சாதனைகள் கூடும்.

நம்மை நாமே ஆய்ந்து சரி செய்து கொள்ள இந்த குறிப்புகளை முயன்று பார்க்கலாமே டயாபடிக் நெப்ரோபதி எனப்படும் இந்த நிலை சர்க்கரை நோய் காரணமாக சிறு நீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை காண்பிக்கின்றது. சிறு நீரக செயலிழப்பு ஏற்படலாம்.

இதனால் உடலின் கழிவு பொருட்கள், அதிக நீர் இவை சிறுநீரகம் மூலம் ரத்தத்தில் இருந்து பிரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவது நடைபெறும். இதனால் உயர் ரத்தம், இருதய நோய் பாதிப்பு, பக்க வாதம் என ஏற்படலாம். பொதுவில் சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் ஏற்பட்டு சில ஆண்டுகள் சென்று சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.

ஆனால் பலருக்கு சர்க்கரை நோய் இருப்பதே காலம் சென்றுதான் மருத்துவரிடம் சென்று கண்டுபிடிக்கின்றார்கள். இவர்களுக்கு அப்பொழுதே கூட சிறுநீரக பாதிப்பு ஏற்படும் நிலையும் உண்டு. இதன் காரணமாகவே மருத்துவர்கள் சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்வது நல்லது என்று வலியுறுத்துகின்றனர். சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் இவை சீராய் இருப்பது அனைவருக்குமே மிக அவசியம்.

ரத்த பரிசோதனை சிறுநீர் பரிசோதனை மற்றும் தேவைப்படும் கூடுதல் பரிசோதனைகளை மருத்துவர் செய்வார். ஏனெனில் ஆரம்ப கால கட்டத்தில் அறிகுறிகளை அவ்வளவாக கண்டுபிடிக்க முடியாது. ஆனால் பிறகு தெரியும் அறிகுறிகளாக கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்தம்.

சிறுநீரில் புரதம். பாதம், கணுக்கால், கைகள், கண்கள் இவற்றில் வீக்கம். அதிக சிறுநீர் போக்கு. கவனிக்கும் திறன் குறைதல், குழப்பம். மூச்சு வாங்குதல். பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி, தொடர்ந்து உடலில் அரிப்பு, சோர்வு இவைகள் இருக்கும். இப்படி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை, கட்டுப்பாட்டில் இல்லாத உயர் ரத்த அழுத்தம். புகை பிடிப்பது, அதிக கொழுப்பு, அதிக எடை, பரம்பரையில் சிறுநீரக பாதிப்பு போன்றவை சிறுநீரக பாதிப்பினை விரைவில் ஏற்படுத்துபவையாகும்.

சிறுநீரக பாதிப்பின் காரணமாக உடலில் நீர் தேக்கம்- கை, கால்களில் வீக்கம், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரிக்கும். இருதயம், ரத்த குழாய்களில் பாதிப்பு, பக்கவாதம் ஏற்படும். கண் ரத்த குழாய்களில் பாதிப்பு உண்டாகும். கால்களில் புண், வயிற்றுப் போக்கு நரம்புகள் பாதிப்பு உண்டாகலாம்.

எலும்புகளில் பாதிப்பு உண்டாகும். சிறுநீரகங்களை சீர்படுத்த முடியாத அளவு பாதிப்பு உண்டாக்கலாம். இவைகளை தவிர்க்கும் முறை சர்க்கரை அளவினை அனைவரும் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

சர்க்கரை நோய் இருந்தால் முறையான மருந்து எடுத்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். எதற்குமே சுய சிகிச்சை வேண்டாம். மது, புகை, கூடாது. செயல்படுத்துவோமே!

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: