இலங்கைமுக்கிய செய்திகள்வட மாகாணம்
மன்னாரில் போதைமாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது!

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர் வீதி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் அடங்கிய சிகரெட்டுக்களுடன் புதன்கிழமை (30) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 22 வயது இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களது உடமையிலிருந்து குறித்த போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.