முக்கிய செய்திகள்

மனோகரி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

கிழக்கு மாகாணத்தில் மனோகரி பயிற்சி நெறியை புர்த்தி செய்த நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மனோதத்துவ நிபுணர் கலாநிதி  கணேசன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறீன் காடன் ஹோட்டலில் இடம் பெற்றது.

மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் (CHRD) எற்பாட்டில் கிழக்கு மாகாண அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவன ஊழியர்களுக்கு நடாத்தப்பட்ட சமூகநலன் மற்றும் நல்வாழ்வு தொடர்பான பயிற்சி நெறியான மனோகரி  அலகினை பூர்த்தி செய்த  நபர்கள் இதன்போது சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

சமூக மட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளைத்  தீர்த்து வைப்பதற்கும் சமூகத்தில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்குமாக இக் கற்கை நெறி அமைந்திருந்தது.

தனிநபர் குடும்பம் சமூகம் என்பவற்றிற்கு தேவையாக கருதப்படும் விடயதானங்கள் இக்கற்கை நெறியில் நிபுணர்களினால்  வளவாடப்பட்டது. ஆறு நாட்களைக் கொண்ட  இக் கற்கை நெறியினை கலாநிதி கணேசன் மற்றும் சண்முகதாசன் ரவிந்திரன்  ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு பயிற்சி வழங்கியிருந்தனர்.

இந் நிகழ்வில் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலைய நிறைவேற்று அதிகாரி மில்ஸ்இ தலைமைக்காரியாலய திட்ட முகாமையாளர் திருமதி புஷ்பராணி பிகுறாடோஇ மாவட்ட இணைப்பாளர் பரசுராமன் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: