இலங்கைகிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

மண்முனைப் பற்றில் புதிய வீடுகள் அமைப்பவர்களுக்கு தென்னை மரங்கள் வழங்கி வைப்பு

மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் புதிய வீடுகள் அமைப்பவர்களுக்கு தென்னை மரங்கள் வழங்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச சபை கட்டிடத்தில் இன்று இடம்பெற்றது.

ஆரையம்பதி பிரதேச சபை எல்லைக்குள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை திட்டத்தின்கீழ் புதிய வீடுகளை கட்டுபவர்கள் மற்றும் புதிதாக வீடு கட்டுவதற்கென அனுமதி பெற்றவர்களுக்கான தென்னை மரங்கள் இன்று (06) மண்முனைப் பற்று பிரதேச சபை செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் எனும் அரசின் வேலைத்திட்டத்தின்கீழ் இத்தென்னை மரங்கள் தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் 136 தென்னை மரங்கள் 68 பயனாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டன. இதே வேளை மண்முனைப் பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்களுக்கும் தென்னைமரங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் திருமதி. ரவீந்திரன், ஆரையம்பதி பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் றம்லத் ஹ{சைன், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், தென்னை அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களென பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: