மட்/வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையில் கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்/வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையின் 203வது ஆண்டையொட்டி நேற்றைய தினம் பாடசாலையின் “Croft” மண்டபத்தில் ஆரம்ப பிரிவு மாணிகளின் கலாசார கலை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
இக் கலை நிகழ்வுக்கு பாடசாலை அதிபர் திருமதி. T. உதயகுமார் தலமை பொறுப்பை ஏற்றிருந்தார்.
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி பணிப்பாளர் திருமதி. T. உதயாகரன், கௌரவ அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் திரு. S. சுரேஸ், மற்றும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கதிரியக்க நிபுணர் செல்வி. சக்தியவானி ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.
ஆரம்ப பிரிவு சிறார்களின் 30 இற்கு மேற்பட்ட கலாசார கலை நிழ்வுகள் அனைத்தும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்ததோடு இவற்றிலும் குறிப்பாக வரவேற்பு நடனம், மயில் நடனம், நாட்டுப்புற பாடலுக்கான நடனம், வண்ணத்துப்பூச்சி நடனம், சிங்கள நடனம் போன்றவை அரங்கிற்கு மேலும் அழகு சேர்த்தன.
இவ் நிழ்வுபற்றி கௌரவ அதிதி … “மாணவர்கள் தங்களது ஆளுமை விருத்தியை வளர்த்துகொள்வதற்கு கலை அம்சங்கள் அவசியம் என்றும், இப்படியான நிகழ்வுகள் தொடர வேண்டும் என்றும், மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கு இவ்வாறான கலை அம்சங்கள் அவசியம் ” என்றும் குறிப்பிட்டார்.
மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்வு 7.30 மணியளவில் நன்றியுரையுடன் முடிவுற்றது.
பெற்றோர், ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








