இலங்கைஉதைப்பந்தாட்டம்கிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்விளையாட்டுச்செய்திகள்

மட்/ககு/கட்டுமுறிவுக்குளம் அ.த.க. பாடசாலை கிழக்கு மாகாண சம்பியன் மகுடம் சூடியது

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் (07) 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உதைப்பந்தாட்டப்போட்டி கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப்போட்டியில் எல்லைக்கிராமமான ஆண்டான்குளம் மட்/ககு/கட்டுமுறிவு அ.த.க. பாடசாலையும் மட்டக்களப்பு பன்சேனை பாரி வித்தியாலய மாணவர்களும் மோதினர். இப்போட்டியில் கட்டுமுறிவு பாடசாலை அணி 4கோல்களை அடித்தது. பன்சேனை வித்தியால அணி எந்த கோல்களையும் அடிக்கவில்லை. கட்டுமுறிவுப்பாடசாலை 4:0 என்ற ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சம்பியன் மகுடம் சூடியுள்ளனர்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: