இலங்கைகிழக்கு மாகாணம்பிரபலமானவைமுக்கிய செய்திகள்

மட்டக்களப்பு  வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள்   சாதனை

மட்டக்களப்பு  வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் அதிகளவிலானோர் பல்கலைக்கழகத்திற்கு  தேர்வாகி  சாதனை படைத்துள்ளனர்.

 கடந்த கா.பொ.த உயர்தரப்  பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 100 க்கு அதிகமான  மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு  தெரிவாகி  சாதனை படைத்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் நேற்று (05) வெளியான நிலையில்  வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள்  மாவட்ட  ரீதியில் உயிரியல் விஞ்ஞான பிரிவில்  ஆறாவது இடத்தையும் வணிகப்பிரிவில்  ஐந்து  மற்றும் ஆறாவது  இடத்தையும் கணிதப்பிரிவில்  பத்தாவது  இடத்தையும், கலைப்பிரிவில் நான்காவது ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது இடத்தையும்   பெற்றுள்ளனர்.

பாடசாலை நிறுவாகத்தினால்  மேற்கொள்ளப்பட்டு வரும்  சிறந்த செயல் திட்டங்களினால் இம்முறை வின்சன்ட் மகளிர் மாணவிகள் வர்த்தகப்பிரிவில்  100 வீதம் சித்தி பெற்றுள்ளதுடன் அதிகளவான மாணவிகள் பல்கலைக்கழகம்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.    

எனவே இவ்வாறான மகத்தான சாதனையினை புரிந்த மாணவ செல்வங்களை வாழ்த்துவதுடன் இதற்கென முன்நின்று உழைத்த கல்விப்பணிப்பாளர், அவருடன் இணைந்த குழாமினர், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கல்வியியலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர். இவர்களுக்கு எமது செய்திச் சேவை சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: