இலங்கைகிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட கணக்காய்வு முகாமைத்துவக்  குழுவின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கணக்காய்வு முகாமைத்துவக் குழுவின் நிலைப்பாடுகள்; தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலின் கீழ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செயலகத்தின் உள்ளகக் கணக்காய்வு, திட்டமிடல் பிரிவு மற்றும் 14 பிரதேச செயலகங்களின் கணக்காய்வு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரும் இக்குழுவின் இணை அங்கத்தவருமான வி. ஆர். ஆர். மீபுர, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு அத்தியட்சகர் ஏ. எம். மாஹிர், மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் (பதில்) எம். எஸ். பஸீர் மற்றும் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் காயத்ரி ரகுராம் ஆகியோர் கணக்காய்வுகளின் அறிக்கைகளைத் தெளிவுபடுத்தியதுடன் அவற்றை முன்னேற்றகரமாகப்  பேணுவதற்கான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

இக்கலந்துரையாடலில் களப்பணிகளின் போது வாகனங்களைப் பயன்படுத்துவதில் காணப்படும் எரிபொருள், மின்சாரம், தபால் ஆகியவற்றுக்கான செலவுக் கட்டுப்பாடுகள், மேலதிக நேரப் பணிக் கொடுப்பனவுகள், கிராம சேவகர்களின் கணக்காய்வுகளை பிரதேச செயலகங்கள்; மேற்கொள்ளல், களப்பணிகளில் ஈடுபடும் சமூக சேவைகள், அபிவிருத்தி போன்ற துறை சார் அலுவலர்களின் வரவு, எனப் பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டத்தின்  14 பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: