முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு பொலிசாரினால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

மட்டக்களப்பு பிரதேசத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் திருடர்கள் பகலிலும் இரவிலும் நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே பொது மக்கள் தமது உடமைகளை பாதுகாப்பாக வைக்திருக்குமாறும் சந்தேகத்துக்கு இடமாக யாரும் நடமாடினால் உடன் பொலிசாருக்கு அறிவித்து ஒத்துழைக்குமாறு பொதுமக்களை மட்டு தலைமையக பொலிசார் கோரியுள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுத்து இன்று வியாழக்கிழமை (09) துண்டுபிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அண்மைகாலமாக பகலிலும் இரவிலும் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் தங்கள் உடமைகளை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் துவிச்சக்கரவண்டி, மோட்டர்சைக்கிள், முச்சக்கரவண்டி, கார் மற்றும் வான்களை பூட்டி திறப்புக்களை பாதுகாப்பாக வைத்துகொள்வதுடன், தங்க ஆபரணங்கள், பணம், ஆவணங்கள் போன்றவற்றையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

அதேவேளை வீட்டை விட்டு வெளியே செல்லும் போது வீட்டை நன்றாக பூட்டி திறப்பினை கொண்டு செல்லவும் அதைவிடுத்து திறப்பை பூச்சாடியின் கீழே, கால்துடைப்பான் கீழே வைப்பதை தவிர்ப்பதுடன் சிறுபிள்ளைகளை தனிமைப்படுத்தி வீட்டில் விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும், சிறுவர்களுக்கு தெரியாதவர்கள் இனிப்பு பண்டம் வழங்கினால் அதை வாங்கி உண்ணவேண்டாம் என பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவதுடன் வீட்டிற்கு அறிமுகம் இல்லாத நபர்கள் வருவதற்கு அனுமதிக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படாடுள்ளனர்.

அதேவேளை யாசகம் பெறும் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதாக கூறிவரும் நபர்கள் மீது கவனமாக இருக்கவும். வெளியில் வாகனம் நிறுத்த தேவை ஏற்பட்டால் சிசிரிவி கமரா பொருத்தப்பட்ட இடத்தில் நிறுத்தவும்.

அவ்வாறே வியாபார நிலைய கதவுகளை பாதுகாப்பான முறையில் அமைத்துக் கொள்வதுடன் சிசிரிவி கமரா பொருத்தப்படல் அவசியம்.

எனவே பொதுமக்க தமது உடமைகளில் அதிக கவனம் எடுத்து செயற்படுமாறும் சந்தேகத்துக்கு இடமாக நபர்கள் நடமாடினால் உடன் 119 அவசரசேவை அல்லது 0718591130 பொலிஸ் பொறுப்பதிகாரி அல்லது 065 2224422 பொலிஸ் நிலைய இலக்கத்துக்கு அழைகத்து பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களை பொலிசார் கேட்டுள்ளதாக அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: