இலங்கைகிழக்கு மாகாணம்பிரபலமானவைமுக்கிய செய்திகள்
டிரெண்டிங்

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கணணிகளை திருடிய இரு ராணுவ சிப்பாய்கள் உட்பட மூவர் கைது.

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இருந்து கணணிகளை திருடிச் சென்ற இரண்டு இராணுவ சிப்பாய்கள் உட்பட மூவரை வெலிக்கந்தை வீதி சோதனைச் சாவடியில் வைத்து இன்று அதிகாலை 10 மணியளவில் கைது செய்துள்ளதாகவும், இவர்களிடம் இருந்து 5 கணினிகள் 80 மின்விளக்குகள் மீட்கப்பட்டுள்ளதாகவும்  வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை  பொலிஸ் பிரிவிலுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் 2019 ஆம் ஆண்டு உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் ராணுவம் பொறுப்பேற்று,  பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் கொரோனா சிகிச்சை மத்திய நிலையமாக அதனை மாற்றி செயற்பட்டு வந்ததுடன் தற்சமயம் இது ராணுவ பாதுகாப்பில் இருந்து வருகின்றது…

இந்த நிலையில் குறித்த பல்கலைக்கழகத்தில்  காவல் கடமையாற்றிவந்த இரு ராணுவத்தினர் கடமை நேரத்தில் அங்கிருந்து 5 கணினிகள் மற்றும் 80 மின் விளக்குகளை திருடி அவைகளை பார்சல் செய்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இருவரும் கடமையிலிருந்து விடுமுறையில் வீட்டுக்குச் சென்று விடுமுறை முடியும் முன்னர்  பல்கலைக்கழகத்திற்க்கு திரும்பி சம்பவத்தினமான இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றில் பார்சல் செய்து வைத்திருந்த கணினி மற்றும் மின் விளக்குகளை திருடிக் கொண்டு பிரயாணித்த நிலையில் வெலிக்கந்த வீதிச் சோதனை சாவடியில் பொலிசார் குறித்த முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோது திருடிச் செல்வதை கண்டுபிடித்த பொலிசார், இரு ராணுவ சிப்பாய்கள் முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட இருவரும் வெல்லவாய குருநாகலை சேர்ந்தவர்கள் எனவும், இந்த பல்கலைக்கழகத்தில் ராணுவம் பொறுப்பேற்ற பின்னர் பல லட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல்  பொருட்கள் திருடுபோயுள்ளதாக பல்கலைக்கழக முகாமையாளர் பொலிஸ் நிலையத்தில் ஐந்து முறை பாடுகள் செய்துள்ளதாகவும், இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: