முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் மலையகம் 200 ஓவிய கண்காட்சி

இன்று(18) மட்டக்களப்பில் YMCA மண்டபத்தில் காலை 10 மணிக்கு இந் நிகழ்வு விம்பம் நிறுவனத்தின் தலைமையில் இடம் பெற்றது .

ஓவிய கண்காட்சியின் கருப்பொருளாக மலையக மக்களின் “வலியும் வாழ்வும்” என்பது அமைந்திருந்தது .

கண்காட்சியில் நூல் வெளியீடு அறிமுகம், கலந்துரையாடல், போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சிறுகதை, ஓவியம், கட்டுரை ப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும், நினைவுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இங்கு காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்கள் மலையக மக்களின் சமூக , பொருளாதார, வாழ்வியல், கலாசார பிரச்சினைகள் போன்றவற்றை வெளிக்கொணரும் முகமாக காட்சிப்படுத்தப்பட்டது.

ஓவிய கண்காட்சியானது நாளையும் (19) இடம்பெற உள்ளது. அனுமதி இலவசம்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: