இலங்கைமுக்கிய செய்திகள்

போலி கடவுச்சீட்டு விவகாரம்: சீனப் பிரஜையை நாடு கடத்தத் தீர்மானம்!!

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவரை நாடு கடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி துபாயிலிருந்து இரண்டு சீனப் பிரஜைகளும் ஒரு எகிப்தியரும் இலங்கைக்கு வந்திருந்தனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள்
இதில் சீனர்களில் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கினியாவில் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டை கொண்டிருந்தார்.

இந்தநிலையில் அது போலியானது என்று கண்டறிந்த குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள், அவரை நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

இதனையடுத்து சீன பிரஜையும், சகாக்களும் கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இராஜாங்க அமைச்சர்
இந்தநிலையில் விடயத்தில் தலையீடு செய்த இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, 2023 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பினார்.

அதில் தனது அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சீனப் பிரஜை இலங்கை வந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

எனவே கடவுச்சீட்டை பரிசீலித்து சீன நபரை இலங்கைக்குள் அனுமதிக்குமாறு இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையில் உள்ள சீன நிறுவனம், அவர் உண்மையானவர் என்றும் அவர் சீன கடவுச்சீட்டை வைத்துள்ளார். அவருக்கு விதிக்கப்படும் எந்த தண்டனைக்கும், அல்லது அவரை நாடு கடத்தும் முடிவுக்கும் தாங்களே பொறுப்பு என்று கூறியதன் அடிப்படையிலேயே தாம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு கடிதம் அனுப்பியதாக அருந்திக்க பெர்ணான்டோ விளக்கமளித்திருந்தார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சு

எனினும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகின்ற நிலையில் இந்த விடயம் அமைச்சர் டிரன் அலஸிடம் தெரிவிக்கப்பட்டது.

முதலில் சீன நாட்டவர் தொடர்பில் சீன தூதரகத்துடன் சரிபார்த்து முடிவெடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்ததாக அருந்திக்க பெர்ணான்டோ குறிப்பிட்டிருந்தார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: