முக்கிய செய்திகள்

போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை இல்லாது ஒழிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!

கிரான் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில்
“போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்”  எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று கிராம மக்களினால் முன்னெடுக்கப்பட்டது.

மாவட்டத்தில் அதிகரித்துவரும்  போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிக்கும் நோக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமானது கூழாவடி கலைவாணி வித்தியாலயத்திற்கு முன்பாக இருந்து பிரதான வீதி ஊடாக கூழாவடி சந்திவரை சென்று மீண்டும் பாடசாலை வளாகத்தை வந்தடைந்ததும், அருவி பெண்கள் வலையமைப்பினால் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வீதியோர நாடகம் ஒன்றும் இடம்பெற்றது.

அருவி பெண்கள் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மயூரி ஜனனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக குறித்த கிராம மக்களிடையே கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு  “போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழித்தல்” என்பன தொடர்பாக இளைஞர், யுவதிகள் மற்றும் வயோதிபர்களுக்கிடையே விழிப்புணர்வூட்டும் செயற்பாட்டினையும் முன்னெடுத்திருந்தனர்.

குறித்த வீதி நாடகத்தினை பல்கலைக்கழக இளைஞர் நாடக குழுவினர் திறம்பட நடித்து போதை ஒழிப்பு தொடர்பான பல விடயங்களை முன்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக பாடசாலை வளாகம் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன், அருவி பெண்கள் வலையமைப்பின் உதவி இணைப்பாளர் தர்ஷனி ஸ்ரீகாந்த், கணக்காளர் எஸ்.உஷாந்தினி, பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் பாசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: