இலங்கைகிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

பொது மக்களுக்கு அறிவுறுத்தும் வாழைச்சேனை பொலிசார்

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட பல திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களை அவதானத்துடன் இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்துதல் விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை காரணமாக பரவலாக திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றதனால் எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும் என்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், ஒலிபெருக்கி அறிவிப்பு ஊடாகவும் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.

எனவே, சந்தேகத்திற்கிடமாக யாரையும் அவதானித்தால் உடடியாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய 0652257709, 0652257347 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தாருங்கள் என்று பொறுப்பதிகாரி பொதுமக்களை கேட்டுங்கொண்டுள்ளார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: