கிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

பெண் உட்பட இரண்டு இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

திருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, பெண் உட்பட இரண்டு இளைஞர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று(24.05.2023) குறித்த சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த நவாஸ் ரஹ்மான் (23வயது) மற்றும் ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த பைசர் ஹஸாத் (22வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடரும் சோதனைகள்
குறித்த சந்தேகநபர்கள், மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது 05 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 23ம் திகதி மொரவெவ விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்காக தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணை 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், குறித்த பெண் தொடர்பில் முன் குற்றங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அறிக்கையை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

இந்நிலையில் மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: