தொழில்நுட்பம்

புதிய அம்சத்துடன் அறிமுகமாகும் ஐ போன் 15 ப்ரோ மெக்ஸ்

ஐ போன் 15 ப்ரோ மேக்ஸ் உலகின் மிகவும் மெல்லிய ஒளிச்சாயுமூரத்தைக் (bezels) கொண்ட அலைபேசியாக வளம் வரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உலகின் விலை உயர்ந்த அலைபேசிகளில் ஐபோன் வகைகள் முன்னிலை வகிக்கின்றன.

ஐபோன் உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐ போன் ப்ரோ மேக்ஸ் ஆகிய புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த மாடல்களில் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் வகை போன் உலகின் மிகவும் மெல்லிய ஒளிச்சாயமூரத்தைக் கொண்ட அலைபேசியாக கருதப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஷயோமி, சாம்சங் கேலக்ஸி எஸ் 23 ஆகிய மாடல்களை விடவும் இந்த ஐபோன் மாடலின் bezels மெல்லியது என தெரிவிக்கப்படுகிறது.

ஐ போன் 15 ப்ரோ மேக்ஸ் அலைபேசியின் bezels 1.81 மில்லி மீட்டர் அளவினை உடையதாக காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அலைபேசியில் அலைபேசியின் மொத்த பகுதியில் 93 வீதமான பகுதி தொடுதிரையாக கொண்டிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 23 மாடலில் bezels எனப்படும் இந்த ஒளிச்சாயமூரம் 1.95 மில்லி மீட்டர்கள் ஆகும்.

ஐ போன் ப்ரோ மேக்ஸ் மாடலில் தொடுதிரை அளவு 88 வீதமாக காணப்படுகிறது.

ஐபோன் 14 ல் தொடுதிரை 86 வீதமாக காணப்படுகின்றது.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் உடன் ஒப்பீடு செய்யும் போது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல் மிகவும் மெல்லியதாக காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: