பிரித்தானியாமுக்கிய செய்திகள்

பிரித்தானிய பெண் இன்ஸ்டகிராமர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி!!

பிரித்தானிய பெண் இன்ஸ்டகிராமர் கெய்லி பிரேசர் இலங்கை அதிகாரிகளின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர்நீதிமன்றம் இலட்சம் ரூபாய் சட்டச்செலவுடன் தள்ளுபடி செய்துள்ளது.

இலங்கையில் இருந்து தம்மை நாடு கடத்துவது என்று அதிகாரிகள் எடுத்துள்ள முடிவை சவாலுக்கு உட்படுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தின் போது, சமூக ஊடகங்களில் இலங்கையின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஆவணப்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கெய்லி பிரேசர் என்ற பெண்ணே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

நாடு கடத்தும் முடிவு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தன்னிச்சையான முறையில் மேற்கொண்ட இந்த நாடு கடத்தும் முடிவை இரத்து செய்ய உத்தரவிட கோரி, மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

நீதியரசர் முர்து பெர்னாண்டோ தலைமையிலான உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில் ஆரம்பத்திலேயே மனுவை நிராகரிக்க தீர்மானித்துள்ளது.

சட்டமா அதிபர் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிப்பு
மனுதாரர் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளார் என்று சட்டமா அதிபர் மன்றில் குறிப்பிட்டார்.

முன்னதாக மருத்துவ வீசாவில் இலங்கை வந்திருந்த பிரேசர், விசா நிபந்தனைகளை மீறியதன் காரணமாக, 2022 ஆகஸ்ட் 15க்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு குடிவரவு திணைக்களம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் அவர் அதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றமும் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இதைப் படித்தீர்களா?
Close
Back to top button
error: