பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைத்தல் தொடர்பான செயலணியினருடனான கலந்துரையாடல் காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (02) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மலராஜ், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், காதி நீதிபதி ரூபி, சட்டத்தரணி உவைஸ், மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி கலாவுதீன், சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்கள பொறுப்பதிகாரி சந்திரகாந்தன், ஆராய்ச்சிக்கும் வலுவூட்டலுக்குமான இஸ்லாமிய பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் அனிஸா பிர்தௌஸ், மகளிருக்கான தேவை நிறுவனத்தின் பணிப்பாளர் சங்கீதா , சகல கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அவற்றுக்குத் தீர்வினை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டல் தொடர்பாக ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம் பெற்றது.
அத்துடன் நீதிமன்றில் முன்னைய காதியின் தீர்ப்பில் திருப்தியின்மை, பாரபட்சமுள்ள பெண்கள் மீளவும் வழக்கினை பதிவு செய்யுமாறு ஆலோசிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட சகல பெண்களுக்கும் இத்தகவலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வானது மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். பி. றஸ்மின் ஏற்பாட்டில் ஆராய்ச்சிக்கும் வலுவூட்டலுக்குமான இஸ்லாமிய பெண்கள் அமைப்பின் பங்களிப்புடனும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.