முக்கிய செய்திகள்வட மாகாணம்

நள்ளிரவில் தையிட்டியில் இருந்து தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தமிழர்களுக்கென்று ஒரு தாயகம் இல்லாத நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரைக்கு எதிராக நள்ளிரவு வரை தொடர்ந்து போராட்டம் இடம்பெறுகின்றது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நாங்கள் நள்ளிரவிலும் தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தை தொடர்கின்றோம்.

தமிழர்களுக்கென்று ஒரு தாயகம்
இந்த போராட்டம் நீதிமன்றத்தின் கட்டளையை மதித்தே மேற்கொள்ளப்படுகின்றது. நாங்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையானோம்.

இன்றும், நாளையும் விகாரையின் உச்சகட்ட வேலைகளை செய்ய இருக்கிறார்கள். தமிழர்களுக்கென்று ஒரு தாயகம் இல்லாத நிலை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.”என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இதைப் படித்தீர்களா?
Close
Back to top button
error: