முக்கிய செய்திகள்
தெனியாய – பல்லேகம பகுதியில் படுகாயமடைந்துள்ள காவல்துறை கான்ஸ்டபிள்

காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தெனியாய – பல்லேகம பகுதியில் படுகாயமடைந்துள்ளார்.
தன் கடமைக்காக இன்று (16) குறித்த பகுதிக்கு சென்ற போதே அவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த காவல்துறை கான்ஸ்டபிள் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந் நிலையில், தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் தெனியாய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெனியாய காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
